Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நடுரோட்டில் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது .

0

'- Advertisement -

 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் நடுரோட்டில், பணியில் இருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில், தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜகீதா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, முத்தையாபுரத்தில் உள்ள ஒரு கடை அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அந்த 2 பேரையும் அழைத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரிக்க முயன்றார். உடனடியாக அவர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் மறைத்து வைத்து இருந்த அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது

இதை தொடர்ந்து அவருடன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் முத்தையாபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 29) மற்றும் மகாராஜா என்பது தெரிய வந்தது.

 

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.