திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாடில் வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கபசுர குடிநீர்.
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் பரவி வருவதால் வழக்கறிஞர்களின் நலன் கருதி
இன்று 2/12/ 2024 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் திருச்சி வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இதில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்வின் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி. வெங்கட், துணைத் தலைவர் சசிகுமார், இணைச் செயலாளர் விஜய நாகராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராமன் எழிலரசி மூத்த வழக்கறிஞர் விக்கிரமாதித்தன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் செய்திருந்தார்.