Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சி.எஃப்.டி.யூ.ஐ மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்.. அமைப்புசாரா தொழிலாளர்களை பேரமைப்பாக திரட்டுவது என தீர்மானம்.

0

'- Advertisement -

 

திருச்சியில் சி.எஃப்.டி.யூ.ஐ மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்.. அமைப்புசாரா தொழிலாளர்களை பேரமைப்பாக திரட்டுவது என தீர்மானம்.

சுதந்திர தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் கே.சரவணன் தலைமை வகித்தார்.
கரூர் ராதிகா, புதுக்கோட்டை விஜயா மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் யூனியன் பொறுப்பாளர் என்.கே. முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தெத்தூர் கே.கரடி, வழக்கறிஞர் தமிழகன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

முன்னதாக மதுரை ஜெயக்குமார் வரவேற்புரை வழங்கினர். தொடர்ந்து கூட்டமைப்பின் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் தமிழ்நாடு அளவில் அமைப்புசாரா தொழிலாளர்களை பேரமைப்பாக திரட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியாக கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.