திருச்சி தில்லைநகரில் ரூ.1 டெம்பர் கிளாஸ் உள்ளிட்ட பல ஆப்பர்களை அறிவித்த ஐ மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழாவில் குவிந்த பொதுமக்கள் .
திருச்சி தில்லை நகரில் அதிரடி ஆஃபர்களுடன் ஐ மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா.
“ஐ மொபைல்ஸ்” என்ற பெயரில் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா திருச்சி தில்லை நகர் நான்காவது கிராஸ் மெயின் ரோட்டில் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சென்னை கிரீன் டெக்னாலஜி நிறுவனர் தினேஷ் ஜெகநாதன் கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் ஷோரூம் உரிமையாளர் மதன் சிவசாமி, அவரது பெற்றோர்கள் சிவசாமி, சாந்தி மற்றும் நண்பர்கள் உறவினர்கள் வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய ஷோரூமில் ஆப்பிள், ஐ போன், சாம்சங், விவோ, ஓப்போ, ஒன் பிளஸ், எம்.ஐ, ரியல்மீ, நோக்கியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் செல்போன்கள் மற்றும் பவர் பேங்க், ஹெட்போன், டெம்பர் கிளாஸ் உள்ளிட்ட பல பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் , சிறப்பான முறையில் சர்வீஸ் செய்து செய்யப்படுகிறது.
மேலும் திறப்பு விழா சலுகையாக ஒரு ரூபாய்க்கு டெம்பர் கிளாஸ், 99 ரூபாய்க்கு ப்ளூடூத் ஹெட் போன் என பல அதிரடி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால்
வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.