திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட பளு தூக்கும் சங்கம், தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி திருச்சி உறையூரில் நேற்று சனிக்கிழமை தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.( இதில் 200 வீராங்கனைகள்) ஆண்களுக்கான போட்டி 53, 56, 70, 75, 86, 95, 110, 120 கிலோ எடை பிரிவிலும்,
பெண்களுக்கான போட்டிகள் 43, 47, 52, 57, 63, 69, 76, 84 கிலோ எடை பிரிவிலும் 84 கிலோ எடைக்கு மேலேயும் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது.
வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுக்கோப்பையுடன் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மேயர் அன்பழகன், மாநில பளு தூக்கும் சங்க தலைவர் வண்டு ராமச்சந்திரன், செயலாளர் இளங்கோவன், திருச்சி மாவட்ட பளு தூக்கும் சங்க செயலாளர் விசு ராஜன், சேர்மன் வண்டு பெரியசாமி, பொருளாளரும் காமன்வெல்த் விளையாட்டு வீரருமான சுரேஷ் குமார் , சிறப்பு அழைப்பாளராக மிஸ்டர் இந்தியா உன்னி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.