Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நாள் முழுவதும் இயங்கும் தனியார் மதுபான பார்களை மூட யார் பேச்சு வார்த்தைக்கு வந்தாலும் எங்களிடம் எடுபடாது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.

0

 

திருச்சியில் நாள் முழுவதும் இயங்கும் தனியார் மதுபான பார்களை
இந்தப் போராட்டம் மூட யார் பேச்சு வார்த்தைக்கு வந்தாலும் எங்களிடம் எடுபடாது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.
திருச்சி உறையூர் லிங்க நகரில் புதிதாக நிறக்கப்பட்ட மதுபான விற்பனையுடன் கூடிய மனமகிழ் மன்றத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்த மனமகிழ் மன்றத்தை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்ட செந்தில்நாதனிடம் இது தொடர்பாக கேட்டபோது அவர் கூறியதாவது:-

இதுவரை எந்த மதுபான விடுதிகளின் உரிமையாளர்களும் எங்களிடம் பஞ்சாயத்தும் செய்யவில்லை நாங்கள் மறுத்ததால் அவர்கள் பால்டாயிலும் குடிக்கவில்லை.

மக்கள் விரோத இரண்டாம் நம்பர் தொழில் செய்பவர்களுக்கு எங்களை நேருக்கு நேராக சந்திக்க திராணி இருக்காது என்று நம்புகிறோம்.

பார்களை அகற்ற கோரி நாங்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்த நிலையிலும், எதற்கும் அஞ்சாத எங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள், மக்களின் பிரச்சினைகளுக்காக போராடி, கைது செய்யப்பட்டு, அவர்களின் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

எந்த காரணங்களை கூறி எங்களுக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டதோ, அதே காரணங்களை கூறி, அதே இடங்களில் உண்ணாவிரதம் இருக்க மதுரை உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமன்றால், இந்த மனமகிழ் மன்றம் மட்டுமல்ல, திருச்சியில் மொத்தம் 7 மனமகிழ் மன்றங்களும், 11 மதுபான விடுதிகளும் மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. நாங்கள் குறிப்பிட்டுள்ள அந்த 11 மதுபான விடுதிகளிலும், காலை முதலே மதுபான விற்பனையும், மது பிரியர்களுக்கு இட்லி, பணியாரம் சட்னி மற்றும் கண்டலுடன் கூடிய காலை சிற்றுண்டியும் கொடுத்து மாலைவரை குடிக்க வைத்து, அவர்களின் குடும்பங்களை சீர்குலைய வழிவகை செய்கிறார்கள்.

திருச்சியில் துடிப்பான காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் இருந்தும், மிகவும் சக்தி வாய்ந்த நபர்களின் தலையிட்டால் அவர்களாலும் ஒரு எல்லைக்கு மேல் இவர்களை தடுக்க முடியவில்லை.

உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு அனுமதி கிடைத்தவுடன், குறிப்பிட்ட 18 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அனுமதியுடன் எங்கள் உண்ணாவிரத போராட்டம் மற்றும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

குறிப்பிட்ட நபர் சார்ந்த சில கட்சியினரும், மதுபான விடுதிகளுக்கு சொந்தக்காரர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் அறிகிறோம். அது அவர்களின் தொழில் அதில் நாங்கள் தலையிடத் தேவையில்லை.

ஆனால் திருச்சியை பொறுத்தவரை மது பானங்களை வைத்து பணம் செய்வதில், கிட்டத்தட்ட முக்கால்வாசி கட்சிகளும், எவ்வித பேதமும் இன்றி, சிண்டிகேட் வைத்து ஒன்றிணைந்துள்ளனர்.

எனவே மது பானங்களால் மட்டுமலை, திருச்சி மக்கள் சந்திக்கும் அத்தனை பிரச்சினைகளிலும், அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வித எதிர்ப்பு வந்தாலும், குறிப்பாக சமூக விரோதிகளின் முதல் ஆயுதமான அவதூறுகள் வந்தாலும், பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணையின்படி மக்களுக்கான, அம்மா மக்கள் முன்னேற்றக்
கழகத்தினரின் போராட்டங்கள் தொடரும்.

சில விளம்பர டிஸ்க்கலைமரில் வருவது போல் இதுபோன்ற போலி பஞ்சாயத்து பார்ட்டிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று மதுபான பார் உரிமையாளர்களையும் கேட்டுக்கொள்கிறன்

என செந்தில்நாதன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.