திருச்சி மனமகிழ்மன்றத்தை முற்றுகையிட்டு அமமுக இன்று போராட்டம்.
மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கைது.
மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மக்கள் வாழ்வை வதைக்கும் வகையில், காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை 12மணி நேரம் செயல்படும் மதுபான கடைகளை திறக்கப்படுவதை கண்டித்தும், உறையூர் லிங்கநகர் பகுதியில் முன்னதாக செயல்பட்ட டாஸ்மாக் கடையை மூடி தற்போது அதே இடத்தில் புதிதாக திறக்கப்பட்ட மனமகிழ் மன்றத்தை மூடக்கோரியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில், அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து மனமகிழ்மன்றத்தை முற்றுகையிட்டுபோராட்டம் நடத்தினர்.
இப்பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வரும் தினசரி கோழி தொழிலாளியை வாழாதரம் பாதிக்கும். உடனடியாக மூடக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை .
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
பொதுமக்கள் எதிர்ப்பை மீறி தொடர்ந்து மனமகிழ் மன்றத்தை நடத்தினால் தொடர் போராட்டம் நடத்துவோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் நலனுக்காக உண்ணாவிரத போராட்டம் அறிவித்து , மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லாததால் ஆர்ப்பாட்டம் நடத்திய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளை கைது செய்தது பொதுமக்களை இடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .