Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரை நந்தவனம் அமைக்கப்பட்ட விநாயகர் சிலை உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜன ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது .

0

 

 

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று நதிக்கரை, ஆறு மற்றும் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்தனர்.

இதன் ஒரு பகுதியாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாநகரில் 242 இடங்களிலும், புறநகர் பகுதிகளில் 932 இடங்களிலும் என திருச்சி மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 174 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

நேற்று மாலை திருச்சி பாலக்கரை
வேர்ஹவுஸ் நந்தவனம் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வனம் தொடக்க விழாவில் இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனத் தலைவர் மகேஸ்வரி வையாபுரி , செயல் தலைவர் வையாபுரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டார் .

விநாயகர் சிலை கரைப்பதற்கு எடுத்து செல்லும் போது சிலை அமைப்பாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தலின் படி ஊர்வலத்தின் போது ஒலிப்பெருக்கிகளின் சத்தம் குறிப்பிட்ட டெசிபலுக்கு மிகாமல் ஒலிக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், ஊர்வலம் மாலை 3, 4 மணிக்குள் புறப்பட வேண்டும். இரவு 10 மணிக்குள் ஊர்வலத்தை கண்டிப்பாக முடித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஊர்வலத்தின் போது அமைப்பாளர்கள் அவர்களது குழுவினரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் மற்றும் பிற மதத்தினரை புண்படுத்தும் வகையிலான கோஷங்கள் மற்றும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

மேலும் மது அருந்தியவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதை விழாக்குழுவினர் உறுதி செய்தனர். எந்த ஒரு சிறு பிரச்னையும் இன்றி ஊர்வலம் சென்றது.

இந்நிலையில், விநாயகர் சிலை ஊர்வலம் நிகழ்வை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .

Leave A Reply

Your email address will not be published.