கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்ட கோரி அதிமுக வினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தை கண்டு அதிர்ந்த திமுகவினர்.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்ட கோரி
சமயபுரம் டோல்கேட்டில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம்.
திமுக ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர், கட்டி முடிக்கப்பட்ட ஒருசில மாத காலத்திற்குள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை ஒன்றினை கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி
அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மற்றும் திருச்சி புறநகர் தெற்கு ஆகிய மாவட்ட கழகங்களின் சார்பில் திருச்சி கொள்ளிடம் பாலம் அருகில் நம்பர் 1டோல்கேட் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் ஏழாம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தி
ருந்தார். ஆனால் அன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்பட இருப்பதால் இன்று ஐந்தாம் தேதி நடைபெறும் என மாற்றி அறிவித்து இருந்தார் அதிமுக பொது செயலாளர் . அதன்படி
இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ தலைமை வகித்தார் . ஆர்ப்பாட்டத்தில்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி ,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில்
மாநில அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி,
மனோகரன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில செயலாளர் என் ஆர்.சிவபதி,
எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன் செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான்,
முன்னாள் அமைச்சர்கள் பூனாட்சி, அண்ணாவி,
சரோஜா, முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராஜ்,
பரமேஸ்வரி முருகன்,இந்திரா காந்தி,மல்லிகா சின்னசாமி, பாலன், சந்திரசேகர், சின்னசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு (எ)சுப்பிரமணியன், வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மீனவரணி பேரூர் கண்ணதாசன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர்
அறிவழகன் விஜய், ஜெயலலிதா பேரவை அய்யம்பாளையம் ரமேஷ் குமார், இலக்கிய அணி ஜெயம்ஸ்ரீதர்,
இளைஞர் அணி தேவா, மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன், ஸ்ரீகாந்த்,எஸ்.பி முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், சுந்தர்ராஜன், ஆதாளி, டைமன் திருப்பதி,ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக், ரவிசங்கர், அழகாபுரி செல்வராஜ்,வீரமணி.துறையூர் பிரகாஷ், வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், சம்பத்குமார், சாத்தனூர் வாசு,இ.பி.ஏகாம்பரம்,செந்தில், கடிகை ராஜகோபால், செந்தில்குமார், கதிர்வேல்,சோனா விவேக்,வீரமுத்து,எஸ் எஸ் முத்தையா, மண்ணச்சநல்லூர் ராஜேந்திரன், சமயபுரம் ராமு,செல்வி வெங்கடேசன், எம்பி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட
நிர்வாகிகள் நெட்ஸ் இளங்கோ, சண்முகபிரபாகரன்,அருண் நேரு,எஸ்பி பாண்டியன் ராவணன், முத்துக்குமார், எஸ் கே டி . கார்த்திக்,சூப்பர் நடேசன், டி.என்.சிவகுமார்,
பாலசுப்பிரமணியன்,தண்டபாணி,பாஸ்கர்,முன்னாள் கோட்டத் தலைவர் ஏ.பி. கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள்
தெய்வ மணிகண்டன்,
கவுன்சிலர் அனுசுயா ரவிசங்கர், கும்பக்குடி முருகேசன், பவுன் ராமமூர்த்தி, வக்கீல்கள் அழகர்சாமி முருகன், மற்றும் சாந்தி,சாகுல் அமீது,முத்துக்குமார், மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர்,
வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் நலனுக்காக இன்று கூடிய கூட்டத்தை கண்ட திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர் .