Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

5-வது தென் இந்திய சப்-ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி. தமிழ்நாடு ஆண்,பெண் அணி முதலிடம்.

0

 

5-வது தென் இந்திய சப்-ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி.

தமிழ்நாடு ஆண், பெண் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

5-வது தென் இந்திய சப்-ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி
ரோல் பால் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா & தென்னிந்திய ரோல் பால் அசோசியேஷன்
மற்றும் தமிழ்நாடு ரோல் பால் விளையாட்டு சங்கம் & திருச்சிராப்பள்ளி மாவட்ட சாய் ஜி ரோல் பால் சங்கம் சார்பில்
திருச்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தது.

போட்டியின் முதல் நாளான நேற்று சனிக்கிழமை நடந்த துவக்க விழாவிற்கு தமிழ்நாடு ரோஸ் பால் விளையாட்டு சங்க பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மதுரை ரோல் பால் சங்க தலைவர் ராபின் ராஜகாந்தன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக
தென்னிந்திய ரோல் பால் சங்க பொதுச் செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன், வேலம்மாள் போதி வளாக முதல்வர் சகானா ராஜ்குமார், நிர்வாக அலுவலர் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியை இனிக்கோ
இருதயராஜ் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.


இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சோி மற்றும் அந்தமான் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் ‘லீக்’ அடிப்படையில் 16 சுற்றுகள் நடைபெற்றன. முதல் நாள் நடந்த தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி புதுச்சேரியை எதிர்கொண்டு விளையாடியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி விளையாடிய தமிழக அணி இதில் 7-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாம் நாளான இன்று நடந்த இறுதிப் போட்டியில்
தமிழ்நாடு ஆண், பெண் இரு அணியினரும் முதல் இடத்தையும்,
ஆந்திரா ஆண்கள் அணி, கர்நாடகா பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும், கேரளா ஆண்கள் அணி, பாண்டிச்சேரி பெண்கள் அணி மூன்றாவது இடத்தையும் வெற்றனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு தென்னிந்திய ரோல் பால் சங்க பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு ரோல் பால் சங்க துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் கோப்பை மற்றும் மெடல்களை வழங்கி பாராட்டினர்.

முடிவில் திருச்சி மாவட்ட சாய் ஜி ரோல் பால் சங்க அமைப்பு செயலாளர் மதுமிதா நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.