திருச்சியில் தமிழ்நாடு கூடோ 2 நாள் பயிற்சி பட்டறை துவங்கியது. 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு.
தமிழ்நாடு கூடோ 2நாள் பயிற்சி பட்டறை திருச்சியில் இன்று துவங்கியது. – 300க்கு மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்பு,
தமிழ்நாடு மாநில அளவிலான 6வது 2 நாள் கூடோ பயிற்சி பட்டறை இன்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கூடோ விளையாட்டு சங்கத்தில் தலைவர் தங்க.நீலகண்டன் தலைமையில், தமிழக தலைமை பயிற்சியாளர் கந்தமூர்த்தி முன்னிலையில் துவங்கியது.
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் இரண்டாம் துணை ஆளுநர் விஜயலெட்சுமி சண்முகம்,
குத்து விளக்கு ஏற்றி பயிற்சி பட்டையை துவக்கி வைத்தார்.
வாழ்த்துறையை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஷா.இன்ஷா, கைராசி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக
ஓய்வு பெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மண்டல முதுநிலை மேலாளர் புண்ணியமூர்த்தி,
திருச்சிராப்பள்ளி லயன்ஸ் கிளப் சாசனத் தலைவர் முகமதுசபி, திருச்சி மாமன்ற உறுப்பினர் லையன் குமார், தென்னக ரயில்வே பணிமனை பிரிவு தலைவர் பவுல்ரெக்ஸ் பங்கேற்றனர்.
இந்த பயிற்சி பட்டறையில்
தேசிய தலைமைப் பயிற்சியாளர்கள் ஜாஸ்மின் மக்வானா, பிரியன் ராணா ஆகியோர் வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்தனர்.
இன்று மாநில மற்றும் தேசிய நடுவர்களுக்கான பயிற்சி மற்றும் கருப்பு பட்டைக்கான பயிற்சி, விரைவில் நடைபெற உள்ள தேசிய போட்டியில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுக்கான சிறப்பு பயிற்சி, மற்றும் 31மற்றும் 1ம் தேதி நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ள வீராங்கனைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி பட்டறையில் திருச்சி, நாமக்கல், , கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை,கன்னியாகுமரி,
நாகை, திண்டுக்கல் தஞ்சாவூர் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300க்கு மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பயிற்சி பட்டறை காண ஏற்பாடுகளை தமிழ்நாடு கூட விளையாட்டு சங்கத்தின்
செயலாளர் ஷேக் அப்துல்லா,
ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் பென்னி,
இலக்கியா, காவியா
ஆகியோர் செய்திருந்தனர்.
தொடர்ந்து 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி 7வது மாநில அளவிலான போட்டிகள் திருச்சியில் தமிழக தலைமை பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில் நடைபெற உள்ளது.