Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கோரிக்கையை ஏற்று கட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோவிலில் செப்பல் ஸ்டாண்ட் அமைத்ததற்கு வழக்கறிஞர் கிஷோர் குமார் நன்றி .

0

'- Advertisement -

திருச்சி மக்கள் நீதி மய்யத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் நிர்வாகத்திற்கு பாராட்டுகள்.

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட காட்டழகிய சிங்கபெருமாள் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது காலணிகளை விட இடவசதி ஏற்படுத்தி தர மக்கள் நீதி மய்யம் சார்பில் 4 நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தோம்.

நமது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த திருக்கோவில் நிர்வாகம் உடனடியாக திருக்கோவில் வளாகத்தில் செப்பல் ஸ்டான்ட் அமைத்துள்ளது உள்ளபடியே பாராட்டுக்குறிய செயலாகும்.

பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக நிவர்த்தி செய்த ஸ்ரீரங்கம் திருக்கோவில் இணை ஆணையர் மாரியப்பன் , காட்டழகிய சிங்கபெருமாள் திருக்கோவில் கண்காணிப்பாளர். இந்திரகுமார் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பிலும் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம் என தெரிவித்துள்ளார் .

மேலும் காட்டழகிய சிங்கபெருமாள் திருக்கோவில் வளாகத்திலுள்ள தெப்பகுளத்தை தன்னெழுச்சாயாக சுமார் 17-லோடு களிமண் நிரவி_குளத்தை மேம்படுத்தி சுற்றுவட்டார பகுதிகளின் நீர் ஆதாரத்தை பெருக்கிய திருக்கோவில் நிர்வாகத்திற்கு ஒரு ராயல் சல்யூட்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.