திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான கிராம பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டதால் பரபரப்பு .
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து
திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்.
ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு.
திருச்சி மாநகராட்சி வார்டு எண்ணிக்கை
அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சி ஒட்டிய சில ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருச்சி லால்குடி ஒன்றியம் மாடக்குடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர்.
இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அதேபோன்று சோமரசம்பேட்டை மற்றும் அல்லித்துறை ஆகிய பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதிப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.