Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 9 வயது சிறுமியை விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கால் உடைந்து கைது

0

 

திருச்சியில் 9 வயது சிறுமி இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த 5ஆம் வகுப்பு படிக்கும் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 17) இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அந்த சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என்ற நிலையில், அவரது பாட்டி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் பக்கத்து ஏரியாவில் காயத்துடன் நின்று கொண்டிருந்த சிறுமியை பார்த்துள்ளார்.

உடனடியாக அவர் சிறுமியிடம் விசாரித்துள்ளார். அந்த சிறுமியை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பேச்சுக் கொடுத்தவாறு பஸ்சில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பின்னர் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் விடியும் வரை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

சிறுமி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த முதியவர் அவரது பாட்டியிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சிறுமியை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவான நபரை உடனடியாக பிடிக்கு மாறு உத்தரவிட்ட போலீஸ் கமிஷனர் காமினி அதற்காக தனிப்படை அமைத்தார்.

வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான சின்ன ராஜா(வயது 24) என்ற வாலிபரை சிதம்பரத்தில் கைது செய்துள்ளனர். அவரை பிடிக்கும் பொழுது தப்பி ஓடி கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் நடந்த சம்பவம் முழுவதையும் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

பாதிக்கப்பட்ட சிறுமி திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.