Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு ரூ.100 காயின் வெளியிட்ட மத்திய அரசின் நடவடிக்கை போற்றுதலுக்கு உரியது. உபயோகிப்பாளர் உரிமை இயக்க பொது செயலாளர் மகேஸ்வரி வையாபுரி

0

'- Advertisement -

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு ரூ.100 காயின் வெளியிட்ட மத்திய அரசின் நடவடிக்கை போற்றுதலுக்கு உரியது என திருச்சி உபயோகிப்பாளர் உரிமை இயக்க பொது செயலாளர் மகேஸ்வரி வையாபுரி தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது :-
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான டாக்டர் மு. கருணாநிதி தமிழக மக்களுக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளார். மேலும் தமிழில் சிறந்த எழுத்தாளராக திகழ்ந்தார். மே மேலும் தமிழில் பல புத்தகங்களை எழுதியுள்ளார் .

 

அவரது நூற்றாண்டு பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் மத்திய அரசு நூறு ரூபாய் நாணயம் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது . இது வரவேற்கத்தக்கது, போற்றத்தக்கது.

இந்த நாணயம் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும், கருணாநிதியின் புகழ் அனைத்து மக்களையும் சென்றடையும் .

எனவே இந்த நாணயம் கடைகோடி மக்களையும் சென்றடைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தெரிவித்துள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.