திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரின் கேட்காத காதுகளை கேட்க வைக்க பாஜக சார்பில் நாளை சங்கு ஊதும் போராட்டம் .
பாரதிய ஜனதா கட்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி அனைத்து மண்டல் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் .
திருச்சியில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்களுக்கு நோய் நோய் தொற்று ஏற்பட்டு பல்வேறு நபர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் பலர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இதுகுறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும் மேயர் மற்றும் ஆணையரையும் சங்கு ஊதி எழுப்பும் போராட்டம் நாளை காலை ( செவ்வாய்க்கிழமை ) 10 மணி அளவில் திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் வாயிலில் நடைபெற உள்ளது .
இந்தப் போராட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர் .

