வெறும் காற்றை தடுப்பதற்கு ரூ.6.5 கோடியில் தடுப்பு சுவர் கட்டிய பொதுப்பணித்துறை, 30 ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கிய இடத்தில் பல நூறு கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பஞ்சப்பூர் பஸ் நிலையம் ஸ்திரத்தன்மை எப்படி இருக்கும்? திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கேள்வி.
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார், அவை வருமாறு :-
வெறும் “காற்றை” தடுப்பதற்காக 6.5 கோடியில் தடுப்புச் சுவர் கட்டிய பொதுப்பணித் துறை.!!!?
வரிகட்டும் மக்கள் தங்கள் சொந்த இடத்தில் ஒரு வீடு கட்ட வேண்டுமென்றால், அதுவும் கடன் வாங்கி கட்ட வேண்டும் என்றால் அத்தனை கட்டுப்பாடுகள், அனுமதிக்கான ஏகப்பட்ட செயல்முறைகளை விதிக்கும் மாவட்ட நிர்வாகங்கள், மக்கள் வரிப்பணம் என்றால் அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிப்பது ஏன்?
தண்ணீர் வேகமாக சென்றதால் தடுப்புச் சுவர் உடைந்து விட்டது என்றால்…
-எதற்காக அந்த “வரலாற்று சிறப்புமிக்க” தடுப்புச் சுவர் கட்டப்பட்டது?

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நோக்கம் என்ன?
தடுப்புச் சுவருக்கான வரைபட நகல் அங்கீகாரம் அளித்தது யார்?
கட்டப்பட்ட தடுப்புச் சுவரின் தரத்தை பரிசோதித்து யார்?
மண்ணாய் போன மக்களின் வரிப்பணத்தை, இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து எவ்வாறு மீட்பார்கள்?
இதன் நிலையே இவ்வாறு என்றால் மக்கள் வரிப்பணத்தில், பல நூறு கோடிகளில் கட்டப்பட்டு வரும் பஞ்சப்பூர் பஸ் நிலையத்தின் தரம் எவ்வாறு இருக்கும்? 30 ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி இருந்த இடத்தில், ( முதலில் இரண்டு அடி கிராவல் மண் அடிப்பதாக கூறி குளங்கள் மற்றும் எரிகளில் உள்ள வண்டல் மண் அடிக்கப்பட்டது ) அவசர கோலத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களின் ஸ்திரத்தன்மை எப்படி இருக்கும்? என கேட்டுள்ளார் திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.