திருச்சி கே.கே. நகரில் தொழிலதிபரை கடத்திச் சென்று கட்டிப்போட்டு ரூ.16 லட்சத்தை பறித்துச் சென்ற 7 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு .
திருச்சி கே.கே. நகர் பகுதியில் ஓம் என்டர்பிரைசஸ் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனம் நடத்திவரும் மணிகண்டன் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது அலுவலகத்தை திறந்த போது அடையாளம் தெரியாத 7 நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்திருந்து தாய் தன்னை தாக்கி கொலைசெய்துவிடுவதாக மிரட்டிய மேலும் அவரது முகத்தில் மயக்க மருந்தை தெளித்து அவரது காரிலேயே கடத்திச் சென்றுள்ளனர்.
கீரனூர் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் கட்டி வைத்து மிரட்டி அவரது ஏற்கனவே கையெழுத்திடப்பட்ட காசோலை மூலம் வங்கிகணக்கில் இருந்து 12 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், ஏடிஎம் மூலம் பணம் பரிமாற்றம் செய்து 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 16 லட்சம் பணத்தை மிரட்டி எடுத்துக்கொண்டனர் .
பணம் தங்களது கையில் கிடைத்த பிறகு தனியார் நிறுவன உரிமையாளரின் செல்போன் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
முன்னதாக என்னை கட்டி வைத்து அடித்து கொடுமைப்படுத்திய அந்த வீடியோ காட்சிகளை பதிவு செய்து யாருக்கோ அனுப்பியும் வைத்தனர் . பின் தன்னை காரிலே அங்கேயே விட்டுவிட்டு
மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தாலோ, அல்லது தகவல் தெரிவித்தாலோ கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் கடந்த இருதினங்களாக அச்சத்தில் இருந்த மணிகண்டன் தற்போது நண்பர்கள் அளித்த உத்வேகத்தின் காரணமாக கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் மற்றும் குற்றவியல் போலீசார் இருவரும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.