திருச்சி பாலக்கரையில்
9 போதை மாத்திரைகளை விற்க நின்ற 5 பேரில் 4 பேர் தப்பி ஓட்டம். காந்தி .

திருச்சி பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் பாலக்கரை போலீசரகம் கெம்ஸ்டவுண் உள்ளிட்ட பல இடங்களில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கெம்ஸ்டவுன் பகுதியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய போதை மாத்திரைகள் இளைஞர்களுக்கு விற்கப்படுவதாக தகவல் வந்தது .
இதையடுத்து கெம்ஸ்டவுண் பகுதியில் அதிரடியாக களமிறங்கிய பாலக்கரை போலீசார் செங்குளம் காலனியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்து தினேஷ், ஹரி, தனுஷ், அண்ணாமலை ஆகிய நான்கு பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைதான சரத்குமார் காந்தி மார்க்கெட் கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து 9 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.