ஹான்ஸ் போட்டுக் கொண்டால் உற்சாகமாக விளையாடலாம் என ரிலீஸ் வெளியிட்ட கல்லூரி மாணவன் காவல்துறையிடம் சிக்கினான். கல்லூரி மாணவர்களுக்கு எளிதாக போதை வஸ்துகள் கிடைப்பது எப்படி சமூக ஆர்வலர்கள் கேள்வி .
‘
ஹான்ஸ்’ போட்டு கொண்டால் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடலாம்’ என்று ரீல்ஸ் போட்ட கல்லூரி மாணவனை கண்டித்த போலீசார், மன்னிப்பு வீடியோ வெளியிட வைத்துள்ளனர்.
இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்டு வந்த மாணவன், வித்தியாசமாக யோசித்து வெளியிட்ட வீடியோ அவரை போலீசில் சிக்க வைத்துள்ளது.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். ( வயது 22 ) விக்னேஷ்வரன் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை பொருளாதாரம் படித்து வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிடுவதில் அதீத ஆர்வம் கொண்டவர்.
இந்நிலையில் அவர், ‘ஹான்ஸ் போட்டுக் கொண்டால் , உற்சாகமாக கிரிக்கெட் விளையாடலாம்’ என்பதை போல ஒரு வீடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அவரது ரீல்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்த வீடியோ, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் கவனத்திற்கும் வந்தது. அதையடுத்து, அந்த கல்லூரி மாணவரை, அவரது பெற்றோருடன், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்துள்ளார்.

அவருக்கு, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து போலீசார் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளனர்.
கல்லூரியில் படிக்கும் இளைஞர் என்பதால் வழக்குப்பதிவுச் செய்யாமல் அவரை அன்பாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசாரின் அன்பான எச்சரிக்கையை தொடர்ந்து கல்லூரி மாணவன் விக்னேஷ்வரன், “தான் செய்தது தவறு. புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தாதீர்கள்” என்று விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஹான்ஸ் போன்ற போதைப் பொருட்களை கல்லூரிக்குள் எடுத்து வந்து பயன்படுத்தும் பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்து இருக்கிறது.
படிக்கும் வயதில் இதுபோன்ற போதை வஸ்துகளுக்கு மாணவர்கள் அடிமையாவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழக முழுவதும் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் போன்ற போதை வஸ்துகள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் எளிதாக கிடைப்பது எப்படி ? இதிலும் காவல்துறையினர் கவனம் செலுத்த சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.