Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஜூலை 30ஆம் தேதி உண்ணாவிரதம். திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு .

0

 

காலிப் பணியிடங்களை
நிரப்பக் கோரி
ஜூலை 30ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது த்தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் குமார் தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பொது விநியோகத்தை பலப்படுத்தவும் பொது விநியோகத்தில் உள்ள குறைபாட்டினை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தற்போது காலியாக உள்ள பணியிடங்களில் 12 (3) ஒப்பந்தத்தின் படி 2013ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த பருவ கால பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர தன்மையுடைய பணியிடங்களை வெட்டி சுருக்கம் நிகழ்வை கைவிட வேண்டும். நவீன அரிசி ஆலைகளை நவீனப்படுத்தவும், காலியாக உள்ள ஆப்ரேட்டர், டெக்னீசியன் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 2023 ஆம் ஆண்டு உதவியாளரிலிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வில் உள்ள குளறுபடிகளை தவிர்த்து வெளிப்படைத் தன்மையாக செயல்பட வேண்டும். மண்டலங்களிடையே பணியிடை மாற்றம் மேற்கொள்ளும் போது பணி மூப்பு அடிப்படையிலும் வெளிப்படை தன்மையுடன் பணி மாற்றம் வழங்க வேண்டும். விழிப்பு பணிக்குழுவில் நீண்ட காலமாக பணிபுரியும் களப் பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் விதிகளின்படி இருக்கை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 30ஆம் தேதி 1000 திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பெருந் திரள் உண்ணாவிரத போராட்டத்தை சென்னையில் நடத்துவது. ஜூலை 1 முதல் 16ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சாரம் இயக்கம் நடத்துவது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் லூர்துசாமி, சுப்புராஜ், சண்முகம், மோகன், ராஜாங்கம், ராசப்பன், கதிதேச பாண்டியன், பாலசுப்ரமணியம் மற்றும் மண்டல செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் ஏழுமலை நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.