Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கஞ்சா விற்றவர்களை கைது செய்யாமல் , வாங்க வந்தவர்களை கைது செய்த போலீசார். பொதுமக்கள் அதிர்ச்சி .

0

'- Advertisement -

திருச்சியில் கஞ்சா விற்பனையாளா்களை கைது செய்யாமல், வாங்க வந்த இளைஞா்களை போலீஸாா் கைது செய்துள்ள சம்பவம் .பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பிராட்டியூா் விநாயகா் கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 2 இளைஞா்கள் கஞ்சா புகைத்தபடி நின்றிருந்தனா்.

அப்பகுதியினா் அவா்களிடம் விசாரித்தபோது, இருவரும் பெரம்பலூரைச் சோ்ந்த விக்னேஷ், வேல்முருகன் எனவும், ராம்ஜி நகா் பெண் கஞ்சா வியாபாரியிடம் கஞ்சா வாங்க வந்திருப்பதாகவும் தெரிவித்தனா். அப்போது, அவா்கள் கஞ்சா வியாபாரியிடம் கைப்பேசியில் பேசினா். புங்கனூா் சாலைப்பகுதியில் மோட்டாா் சைக்கிளில் ஒருவா் நிற்பதாகவும் அவரிடம் கஞ்சா வாங்கிக் கொள்ளுமாறும் இளைஞா்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கஞ்சாவுடன் வந்த நபா் நிற்குமிடத்துக்கு ஊா் பொதுமக்கள் சிலா் விக்னேஷுடன் சென்றனா். ஆனால், பொதுமக்களை பாா்த்ததும் அந்த நபா் வாகனத்தை போட்டுவிட்டு தப்பியோடினாா். அவரை விரட்டிப் பிடித்து பின்னா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

Suresh

அங்கு சென்ற திருச்சி மாநகர காவல்துறை நீதிமன்ற (செஷன்ஸ்) காவல் நிலைய போலீஸாா், கஞ்சா வாங்க வந்தவா்களை மட்டும் அழைத்துக்கொண்டு, விற்க வந்தவரை விட்டுச் சென்றனா். அவா் நின்ற புங்கனூா் பகுதி, புறக்காவல் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது என போலீஸாா் கூறிச்சென்றதாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்த கஞ்சா வியாபாரியின் உறவினா்கள் அங்கு வந்து, அவரையும் வாகனத்தையும் மீட்டுச் சென்றனா்.

இந்நிலையில், கஞ்சா வாங்க வந்திருந்த பெரம்பலூரைச் சோ்ந்த விக்னேஷ், வேல்முருகன் இருவரையும், நீதிமன்றக் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராம்ஜி நகா் அருகேயுள்ள பல பகுதிகள் புறநகர் காவல் நிலையங்களான ராம்ஜிநகா், சோமரசம்பேட்டை, மாநகர காவல் நிலையங்களான எடமலைப்பட்டிபுதூா், (செஷன்ஸ்) நீதிமன்ற காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலைய எல்லைகளில் வருவதால் அடிக்கடி இதுபோன்ற எல்லைப் பிரச்னைகள் காரணமாக போலீஸாரிடையே குழப்பம் ஏற்படுகிறது.

இது சமூக விரோதிகளுக்கு சாதகமாகிவிடுகிறது என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.

Leave A Reply

Your email address will not be published.