திருச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபுக்கு பணம் ஒன்றே குறிக்கோள். புகையிலை விற்பனையை கைவிட்ட கடைகளுக்கும் சீல் வைக்கும் அவலம். புலம்பும் பெட்டிக்கடைக்காரர்கள்.
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வரும் டாக்டர் ரமேஷ்பாபு ஆரம்பத்தில் நேர்மையாகவும் நியாயமாகவும் பணியாற்றி வந்தார் .
கடந்த ஓராண்டாக இவர் மீது பல்வேறு புகார் வந்த வண்ணம் உள்ளது .
குறிப்பாக சிறு சிறு பெட்டி கடைகள் 50 கிராம் பான்பராக் 100 கிராம் ஹான்ஸ் விற்கும் பெட்டி கடைகளுக்கு சில் வைக்கும் இவர் . பான்பராக், ஹான்ஸ், கூல் லிப் போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை வகைகளை குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்யும் பெரும் பண முதலைகளிடம் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் செல்கிறார் .
டாஸ்மார்க் பார்களில் மற்றும் திருச்சி மாநகரம் முழுதும் இரவு நேரங்களில் பல நூறுக்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் உருவாகியுள்ளது . இவை எங்கு சமைக்கிறார்கள் எவ்வாறு சமைக்கிறார்கள் சுகாதார முறையில் சமைக்கிறார்களா என பலமுறை திருச்சி எக்ஸ்பிரஸ் சார்பில் புகார் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கேயும் ஆய்வு மேற்கொண்டாரா என்ற தகவலும் இல்லை .
திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள பிரபல ரோட்டோர பிரியாணி கடையில் தயிர் வெங்காயம் புளிக்கிறது என ரமேஷ்பாபு அவரிடம் பிரபல பத்திரிக்கை புகைப்பட கலைஞர் புகார் கூறிய போது நான் விடுமுறையில் இருக்கிறேன் யாரையும் அனுப்ப முடியாது முடிந்தால் நீங்கள் வீடியோ எடுத்து பொறுப்புடன் அனுப்புங்கள் என கூறிவிட்டு ஒரு பத்திரிகைக்காரன் உன் கடையை வீடியோ அடிக்கிறான் என அந்த பிரியாணி கடைக்கு தகவலும் கூறியுள்ளார். அவர்கள் வந்து புகைப்படக் கலைஞரின் செல்போனை புடுங்கி சென்று பின் திருப்பி தந்தது வேறு கதை .
அந்தக் கடையில் அவர் வாங்கும் விசுவாசத்திற்கு அந்தப் பத்திரிகை புகைப்பட கலைஞர் வீடியோ எடுப்பதாக அந்த கடைக்கு போன் பண்ணி கூறியுள்ளார் .
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பெட்டைவாய்த்தலையில் ஒரு பெட்டி கடையில் 5 பான்பராக், கூல் லிப் விற்றதாக சீல் வைத்து சென்றார் ரமேஷ் பாபு . இருந்த ஓர் குழப்பம் போய்விட்டதே என மன உளைச்சலில் அந்தக் கடையின் உரிமையாளர் திருப்பதி (வயது 60) என்பவர் அடுத்த நாளே மரணம் அடைந்தார் என்பது வெறும் வேதனைக்குரியது .
தற்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தை முன்னிட்டு கடந்த ஆறு மாதம் முன்பு கோயிலை விட ஒரு கடைக்கு தற்போது சென்று எந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்காதபோதும் அந்த கடைக்கு சீல் வைத்துள்ளார் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரமேஷ் பாபு .
இதனை அந்தக் கடையும் உரிமையாளர் நம்மிடம் கண்ணீருடன் புலம்பியவாறு கூறினார் .
இப்படி ஏழை எளியோரை மிரட்டி பணம் தருபவர்களுக்கு சாதமாகவும் இல்லாத சிறு,குறு பெட்டிக்கடை போன்றவருக்கு சீல் வைப்பதும் வழக்கமாகக் கொண்டுள்ளார் திருச்சி மாவட்ட பெட்டிக்கடை உரிமையாளர்கள் புலம்புகின்றனர் .
புகையிலைப் பொருட்கள் இல்லாமல் சீல் வைக்கப்பட்ட /பாதிக்கப்பட்ட வியாபாரிகள் நீதிமன்றம் நாட உள்ளனர்.
நமது அடுத்த பதிவில் பாதிக்கப்பட்ட பெட்டிக்கடைக்காரர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரமேஷ் பாபு பற்றி கூறும் கண்ணீர் வீடியோ வெளிவரும்.