இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில்

குழந்தை தொழிலாளர்
ஒழிப்பு தின உறுதிமொழி
திருச்சி மண்டல அலுவலகத்தில் ஊழியர்கள் எடுத்துக்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம்தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது .அந்த வகையில் இன்று குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை திருச்சி மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் சமத்துவ நாள் உறுதிமொழி இன்று எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பொது மேலாளர் ( தொழில்நுட்பம் கூட்டாண்மை ) நாசர் துணைமேலாளர்(
தொழில்நுட்பம்) கார்த்திகேயன்,போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆகியோர் எடுத்துக் கொண்டனர்.