திருச்சியில் அரிசி வியாபாரியிடம் ரூபாய் 12 லட்சத்து 98 ஆயிரம் ஆன்லைனில் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை.

திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 49) இவர் அரிசி கடை வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் ஒரு கேஸ் ஏஜென்சி எடுத்து நடத்த முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் ரஞ்சித் குமார் தனியார் நிறுவனத்திற்குகேஸ் ஏஜென்சி கேட்டு விண்ணப்பம் பூர்த்தி செய்துஅனுப்பி இருந்தார்.இதனை அடுத்து மர்ம ஆசாமி ஒருவர் ரஞ்சித் குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டார்.செல்போனில் பேசிய மர்ம ஆசாமி
தன்னை ஹெச்பி எல்பிஜி யில் இருந்து ஜோசி பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பிறகு கேஸ் டீலர்ஷிப் நீங்கள் எடுத்துக் கொண்டால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய ரஞ்சித் குமார் பிறகுமும்பையில் உள்ள வங்கி கணக்கிற்கு
பல்வேறு கட்டங்களில் ரூபாய் 12 லட்சத்து 98 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார்.
பிறகு அவர் ஜோசியை தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்ப்பு கொள்ள முடியவில்லை. பிறகு தான் ரஞ்சித் குமார் நான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்துரஞ்சித் குமார் திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் குமார்யிடம் ரூபாய் 12 லட்சத்து 98 ஆயிரம் பணத்தை ஆன்லைனில் மோசடி செய்த மர்ம ஆசாமி யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.