எனது வெற்றிக்கு காரணம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மட்டும் தான், திருச்சி எம் பி துரை வைகோ பேச்சு . கே.என்.நேரு ஆதரவாளர்கள் அதிர்ச்சி
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து மாபெரும் இருபாலர் கால்பந்து போட்டி நடைபெற்றது.
ஆண்கள் கால்பந்து போட்டியினை திருச்சி மக்களவை உறுப்பினர்
துரைவைகோ, பெண்கள் கால்பந்து போட்டியினை சென்னை மேயர்
பிரியா ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த மக்கள் பிரதிநிதிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துகளை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் அமைச்சர் பொய்யாமொழி தெரிவித்துக் கொண்டார்
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன், பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் சரண்யா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
தொடர்ந்து பேசிய துரை வைகோ,
60 ஆண்டு கால தலைப்புச் செய்தியாக வாழ்ந்தவர் தான் கலைஞர். அவரைப் பற்றி இன்றைய தலைமுறை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
வைகோ 1978 ல் ராஜ்யசபா செல்வதற்கு காரணமாக இருந்தவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தாத்தா அன்பில் தர்மலிங்கம். தற்போது நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு காரணம் அவரது பேரன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தான் என்றார்.
விளையாட்டு என்பது இன்றைய தலைமுறையினருக்கு அவசியமான ஒன்று என்றும், ஆரோக்கியமான வாழ்விற்கு விளையாட்டு முக்கியம் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
துரை வைகோ நாடாளுமன்றம் என்ற ஆடுகளத்திற்கு சென்றுள்ளீர்கள். அங்கு உங்களுடைய கேப்டன் நமது முதலமைச்சர்.
மு க.ஸ்டாலின். மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போட்டியில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் நாடாளுமன்றத்தில் உங்களுடைய குரல் ஓங்கி ஒலிக்கும் அது திருச்சியின் குரலாக ஓங்கி ஒலித்து திருச்சிக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பேசினார்.
திருச்சியில் துரை வைகோ செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன் என அமைச்சர் நேரு முன்பு பேசிய பின்பும் அவர் வெற்றி பெறுவதற்காக கே என் நேரு அவருக்கு கீழ் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அன்போடும் அவரது பார்மையில் கடுமையாகவும் பேசி வேலை வாங்கி வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து துரை வைக்கவே வெற்றி பெற வைத்த நிலையில் அவரோ நான் வெற்றி பெற காரணம் மகேஷ் பொய்யாமொழி தான் என பேசி உள்ளது நேருவின் ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .