திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் மாணவிகள் 2 பேர் மாயம்
திருச்சி ஏர்போர்ட் செம்பட்டு
குடித்தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகள் சௌந்தர்யா (வயது 24)இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ரெங்கநாதன் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சௌந்தர்யாவை தேடி வருகின்றனர்
இதே போன்று திருச்சி அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் ரத்தனம் தெருவை சேர்ந்தவர் மணி இவரது மகள் தர்ஷினி ( வயது 16)இவர் திருச்சியில் உள்ள பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று தோழி வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்ற தர்ஷினி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது தந்தை அரியமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தர்ஷனியை தேடி வருகின்றனர்