ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடிவடையும் . அமைச்சர் கே என் நேரு
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் கட்டுமான பணிகள் முடிவடையும்:
திருச்சி ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும்
கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:-
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் செயல்பாட்டிற்கு வரவிருப்பதை முன்னிட்டு இன்று (10-ந்தேதி)நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன்,மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, நகர பொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து. கொண்டனர்.
இதைத்தொடர்ந்து திருச்சி பஞ்சட்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே என் நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின்போது திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மாவட்ட செயலாளரும் நகர் ஊரமைப்பு துறை உறுப்பினருமான வைரமணி ஆய்வின்போது திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளரும் நகர் ஊரமைப்பு துறை உறுப்பினருமான வைரமணி. ஒன்றிய செயலாளர் மாத்தூர் கருப்பையா, கவுன்சிலர் முத்துச்செல்வம் ,
பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், நாகராஜன், முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன் துர்கா தேவி மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:-
வரும் ஆகஸ்ட் மாதம் 15 -ந் தேதிக்குள்ளாக திருச்சி பஞ்சபூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணி நிறைவடையும். அதற்காக ஒப்பந்ததாரர்களுடன், மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று மாலை கலந்து பேச உள்ளனர்.பணிகள் முடிவதை பொறுத்து திறப்பு விழா தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை ஆய்வு செய்தோம். அங்கு முக்கிய பிரமுகர்களுக்கு என தனி வழித்தடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோ
ம். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பயிலும் பள்ளியிலேயே மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்ததை தொடர்ந்து
திருச்சி பீமநகர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் பணியினையும், வங்கி கணக்கு,அஞ்சல் கணக்கு தொடங்குவதற்கான பணியினையும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாநகராட்சி,மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம் , பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்.