நல்ல சமிக்ஞை கிடைத்துள்ளதால் இன்று எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதியில் நடைபெற இருந்த வேண்டுதல் ஒத்திவைப்பு . அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கி
நல்ல சமிக்ஞை கிடைக்கப் பெற்றுள்ளதால் வேண்டுதல் ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேட்டி.
அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், மீண்டும் அதிமுக ஒன்றிணைப்பு குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ‘‘கட்சியை ஒன்றிணைக்க, எம்ஜிஆர் போல சிக்கல் தீர்ப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும்’’ என்று கு.ப.கிருஷ்ணன் தெரிவித்து இருந்தார் .
அதிமுகவில் ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோரை ஒருபோதும் சேர்க்க மாட்டோம் என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். இந்நிலையில் கட்சி ஒன்றிணைப்பு சாத்தியமா? வருங்காலமே முடிவு செய்யும் என அரசியல் கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கட்சியை ஒன்றிணைக்கும் நோக்கில் ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் .
இதற்கிடையில்
நல்ல சமிக்ஞை கிடைக்கப் பெற்றுள்ளதால் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடத்தில் இன்று வைக்கப்பட இருந்த வேண்டுதல் ஒத்திவைக்கப்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.