திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர், கொள்ளிடம் பகுதிகளில் தொடரும் மணல் கொள்ளை.
கடந்த 10 ஆண்டுகளாக மேலூர் ஆற்று பகுதியில் நடந்த தொடர் மணல் கடத்தலால் அடி மணல் அரிப்பு ஏற்பட்டு முக்கொம்பு , கொள்ளிடம் பாலம் சரிந்தது அனைவரும் அறிந்தது.
கடந்த அதிமுக ஆட்சியில் பழுதான பாலம் பலநூறு கோடி செலவில் புதியதாக கட்டப்பட்டது .
தற்போது கடந்த 3 வருடங்களாக கொண்டையம் பேட்டை கொள்ளிடம் கரையில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை தினமும் 24 மணி நேரமும் மணல் கடத்தல் ஜரூராக நடைபெற்று வருகிறது .
ஆற்றில் மணல் அள்ளி ஏற்படும் பள்ளங்களை எதன் மூலம் மூடுகிறார்கள் என்பதனை அடுத்த பதிவில் படத்துடன் வெளியிடப்படும்.
(மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யார் யார் என்ற விபரத்துடன்)
தமிழகம் முழுவதும் மணல் கடத்தலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்று கரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் கடத்தலை தடுக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.