திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் செல்ல தயாராக இருந்தது. அப்போது விமானத்திற்கு வரும் பயணிகளிடம் விமான நிலைய கவுண்டர் எண் 4 -ல் இமிகிரேஷன் அதிகாரி முகேஷ் ராம் கௌதம் தலைமையிலான இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது திருச்சி மாவட்டம் லால்குடி காணக்கிளியநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த பத்மநாபன் (வயது 54 ) இமிகிரேஷன் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாஸ்போர்ட்டை சோதித்துப் பார்த்தபோது போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயார் செய்திருப்பது தெரிய வந்தது .அதில் பெயர் மற்றும் பிறந்த தேதி அம்மா பெயர் ஆகியவை தவறாக குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே பத்மநாபனை இமிகிரேஷன் அதிகாரிகள் ஏர்போர்ட் போலீஸில் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து ,பத்மநாபனை கைது செய்தார்.