நாளையிலிருந்து 13ம் தேதி வரை இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் பிரவேசிக்கக் கூடாது .திருச்சி கலெக்டர் எச்சரிக்கை
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் வரும் 10ம் தேதி முதல் 13
ஆம் தேதி வரை காலை 7:30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் ஆர்டிசி, ஐடிபிபி சிவகங்கை குரூப் யூனிட் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது.
எனவே இந்த நாட்களில் மேச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் இருக்கக்கூடாது பயிற்சி தளத்தில் பொதுமக்கள் யாரும் பிரவேசிக்க கூடாது என
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரித்துள்ளார்.