திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள், வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள், உரிய பாதுகாப்பு இல்லை. அனைத்து தரைக்கடை சில்லரை வியாபாரி சங்கம் மனு.
திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள், வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள், உரிய பாதுகாப்பு இல்லை.
திருச்சி
அனைத்து தரைக்கடை சில்லரை வியாபாரி சங்கம் மனு.
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து தரைக்கடை சில்லரை வியாபாரி சங்க தலைவர் ஜெய்சங்கர் மாநகராட்சிக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர் அதில் கூறியிருப்பதாவது:-
திருச்சி காந்தி மார்க்கெட் உள்ளே வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. மார்க்கெட் உள்ளே வரும் பொதுமக்கள் யாவருக்கும் பாதுகாப்பு இல்லை.மழை பெய்தால் மழை நீர் ஓடுவதற்கு சாக்கடை இல்லை. இதனால் ரோடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் உள்ள கழிவறை சுத்தமாக இல்லை. மார்க்கெட் உள்ளவும், வெளியேவும் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. மார்க்கெட் உள்ளே மின்கம்பங்கள் ஒன்று கூட வேலை செய்யவில்லை.
இதனால் இருட்டாக காணப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடர்களும், போதை ஆசாமிகளும் உள்ளே புகுந்து கடைகளை உடைத்து பணம் பொருட்களை திருடி செல்கின்றனர்.
இது மாநகராட்சியும், மாநகராட்சி மேயரும் உடனடி தீர்வு காண வேண்டும் மக்களை காப்பாற்ற தவறும் பட்சத்தில் மாநகராட்சி முன் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில்
ஜெய்சங்கர் கூறியுள்ளார்.