தருமபுரம் ஆதீனகா்த்தரை மிரட்டும் வகையில் போலி ஆடியோ மற்றும் விடியோ விவகாரத்தில் 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவா்களில் கைது செய்யப்பட்ட 5 பேரில், பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவா் க.அகோரம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்றவா்கள் மே 28-ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த க. அகோரம் நிபந்தனையின் பேரில் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டாா்.
மயிலாடுதுறையில் அவருக்கு சித்தா்காடு பகுதியில், கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.