டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் பாகிஸ்தான் படுதோல்வியை தழுவி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
டெக்ஸாஸ் மாகாணத்தில் குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தானும் அமெரிக்க அணியும் பலப் பரீட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கிய போது மிகப் பெரிய ஸ்கோரை அந்த அணி வீரர்கள் அடிக்கப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அமெரிக்க அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி 26 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதை அடுத்து பாபர் அசாம் மற்றும் சதாப்கான் ஆகியோர் அந்த அணியை சரிவில் இருந்து மீட்டனர்.இதனால் 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
இதனை எடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஸ்டீவன் டெய்லர் 12 ரன்களில் ஆட்டமிழக்க, மோனான்க் பட்டேல், ஆண்டீரிஸ் கவுஸ் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கேப்டன் மோனான்க் பட்டேல் 38 பந்துகளில் ஏழு பவுண்டரி, ஒரு சிக்சர் என அரை சதம் அடித்தார்.
ஆணிடிரிஸ் கவுஸ் 35 ரன்களில் வெளியேற, அமெரிக்க அணி 111 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இதனை @டுத்து அமெரிக்க அணியின் ஆரோன் ஜோன்ஸ் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி இரண்டு ஓவரில் 21 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரர் முகமது அமீர் அபாரமாக பந்து வீசி வெறும் ஆறு ரன்களை தான் 19 ஓவரில் கொடுத்தார்.
இதனால் கடைசி ஓவரில் 15 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டபோது. பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ரவுப் முதல் மூன்று பந்துகளில் மூன்று சிங்கிள்கள் வழங்கினார். இதனை அடுத்து நான்காவது பந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆரோன் ஜோன்ஸ் சிக்ஸர் அடித்தார். இது ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியது. இதை அடுத்து கடைசி ஓவரில் ஐந்தாவது பந்தில் சிங்கிள்ஸ் எடுக்கப்பட, கடைசி பந்தில் அமெரிக்காவின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது நிதீஷ்குமார் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார். இதன் மூலம் போட்டி சமனில் முடிவடைந்தது.
இதன் அடுத்து வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் மீண்டும் அமெரிக்க அணி பேட்டிங் செய்தது. முகமது அமீர் வீசிய ஓவரில் பல ஓயிடுகள் சென்றது. இதனால் அமெரிக்க அணி 18 ரன்கள் சூப்பர் ஓவரில் எடுத்தது. இதனை எடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தது.
கடைசி பந்தில் 7 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் பாகிஸ்தான் அணி ஒரு ரன் மட்டுமே எடுத்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் அமெரிக்க அணி அபார வெற்றியை பதிவு செய்திருக்கிறது. கத்துக் குட்டி அணியாக கருதப்படும் அமெரிக்கா இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது.
அமெரிக்காவிடம் தோல்வி கண்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ரசிகர்கள் அழுதனர் ஏற்றுக் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ரசிகர்கள் அழுதனர்.