Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஹெல்மெட் அணியாமல் செல்போன் பேசியபடி சென்ற ஸ்ரீரங்கம் பெண் காவலர்

0

'- Advertisement -

 

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் செல்வராணி என்பவர் காவலராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்கூட்டரில் போகும்போது செல்வராணி செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியுள்ளார். அவர் ஹெல்மெட்டும் போடவில்லை. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் அந்த பெண் காவலரை முந்தி சென்ற ஏன் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றவில்லை போக்குவரத்து விதிமுறைகள் எங்களுக்கு மட்டும் தானா உங்களுக்கு அது பொருந்தாதா? என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பெண் காவலர் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

இந்த நிலையில் திருச்சி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தலைக்கவசம் அணியாமல் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய செல்வராணிக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

காவல் துறையினரே இப்படி அலட்சியமாக ஹெல்மெட் அணியாமல் சென்றது பொது மக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படிப்பட்டவர்கள் மீது அபராதம் விதிப்பதோடு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.