திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம்
தவமணி காலனியை சேர்ந்தவர் ஷகில் அகமது இவரது மனைவி கமருனிஷா (வயது 45).இவர் மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியதாக தெரிகிறது .
இந்த நிலையில் கடந்த சில மாத காலமாக கடனை திருப்பி செலுத்த முடியாமல் மனம் உடைந்து குழப்பத்தில் இருந்து உள்ளார். இதனிடையில் கடந்த 29ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளியல் அறையை சுத்தம் செய்யும் அமிலத்தை குடித்து உள்ளார் . இதையடுத்து ஆபத்தான் நிலையில் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கமருனிஷா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.