மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் மற்றும் திருச்சி காவேரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ ஆலோசனை கூட்டம் இன்று காவிரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருச்சி ஜி.ஐ.பி.ஏ உதவி தலைவர் மணிவேல் தலைமை வகித்தார்.
இருதய மின் உடலியங்கியல் நிபுணர் டாக்டர் ஜோஸப் , நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோஸ் ஜாஸ்பர் மற்றும் உணவியல் துறை நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.
ஜி.ஐ.பி.ஏ மதுரை
தலைவர் கோபால் ராஜ், திருச்சி
எம்.ஆர்.ஜி.ஐ.இ.ஏ
இணை செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக திருச்சி ஜி.ஐ.பி.ஏ இணை செயலாளர் ராஜ மகேந்திரன் வரவேற்றார். முடிவில் திருச்சி ஜி.ஐ.பி.ஏ
இணை செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.