Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பகலிலும் உல்லாசமாக இருந்த போது குழந்தை அழுததால் தரையில் அடித்துக் கொண்ட கொடூர கள்ளக்காதலன் .

0

 

திண்டுக்கல் மாவட்டத்தில் பார்த்தசாரதி (வயது 28) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார்.

இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் திவ்யா (27). இதில் திவ்யாவுக்கும் திருமணம் ஆன நிலையில் அவருடைய கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில் தன்னுடைய குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 வயதில் பழனிவேல் ராஜன் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் பார்த்தசாரதி மற்றும் திவ்யா இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வாழ ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி பழனிவேல் ராஜன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அப்போது குழந்தையின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்தது. தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் திடீரென குழந்தை இறந்துவிட்டது. குழந்தையின் உடம்பில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததால் மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் படி காவல்துறையினர் பார்த்தசாரதியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பலத்திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது பார்த்தசாரதி மற்றும் திவ்யா இருவரும் பகல் நேரத்தில் குழந்தையை வைத்துக்கொண்டே உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது குழந்தை அழுது கொண்டே இருக்கும். இதனால் கோபத்தில் பார்த்தசாரதி குழந்தையை கடுமையாக தாக்கியுள்ளார். இப்படி தினசரி இரவு மற்றும் பகலில் அவர்கள் உல்லாசமாக இருக்கும் போது குழந்தை அழுதால் பார்த்தசாரதி குழந்தையை தொடர்ந்து தாக்கியுள்ளார்.

அவர்கள் குழந்தையின் உடலில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து கூட போடவில்லை. இதனால் சம்பவநாளில் வலி தாங்க முடியாமல் குழந்தை தேம்பி தேம்பி அழுதது. அப்போது அவர்கள் உல்லாசமாக இருந்ததால் கோபத்தில் பார்த்தசாரதி குழந்தையை தரையில் அடித்தார். இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தது.

இதை தடுத்த திவ்யாவையும் அவர் தாக்கியுள்ளார்‌. மேலும் பார்த்தசாரதியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..

Leave A Reply

Your email address will not be published.