Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரியமங்கலத்தில் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளை.

0

 

திருச்சி அரியமங்கலத்தில் தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளை.

திருச்சி காந்தி மார்க்கெட் ரோடு மகாலட்சுமி நகர், பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ஆனந்த் (வயது 31). இவர் அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 8 வருடங்களாக இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார் .
இவர் வழக்கம் போல் கடந்த 23-ந் தேதி நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் (நேற்று) காலையில் கம்பெனிக்கு வரும்போது பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் உள்ளே சென்று பார்த்தபோது ரூ. 29,500 பணம் மற்றும் 5 விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து ஆனந்த் அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார் .

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிந்து திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.