Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஓபிஎஸ் அணியிலிருந்து திருச்சி முக்கிய நிர்வாகியான கு.ப. கிருஷ்ணன் விலகல் ?

0

'- Advertisement -

 

Ad banner

ஓபிஎஸ் அணியிலிருந்து திருச்சி முக்கிய நிர்வாகி கு.ப. கிருஷ்ணன் விலகல் ?

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக மீட்பு குழு சார்பில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

TVK ad

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் குப.. கிருஷ்ணன் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து
ஓ. பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு அவர் வருவார்,வருவார் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் அதிமுக மீட்பு குழு சார்பில் வெளியான அழைப்பிதழிலில் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் பெயரும் இடம்பெற்று இருந்த நிலையில் அவர் கலந்து கொள்ளாதது அதிமுக மீட்பு குழு தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக முன்னாள் அமைச்சர் குபகிருஷ்ணன் அதிமுக மீட்பு குழுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் அவர் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகினாரா ?என்ற கேள்வி எழுந்துள்ளது.

பின் நேற்று மாலை முன்னாள் அமைச்சர்
கு.ப.கிஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் வந்து தனியாக முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.