திருச்சியில் மாமியார், கொழுந்தியாளுக்கு சரமாரி கத்தி குத்து மருமகன் உள்பட
4 பேர் கைது .
மதுரை கே.புதூரை சேர்ந்தவர் இரணியன் என்கிற ஸ்ரீராம் ( வயது 27 )இவர் திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பழைய போஸ்ட் ஆபீஸ் சந்து பகுதியைச் சேர்ந்த கதிரேசன் -வாசுகி தம்பதியரின் மகள் நித்யஸ்ரீ என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார் .

இந்த நிலையில் சம்பவத்தன்று திருச்சிக்கு வந்த இரணியன் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கத்தியால் தனது மனைவியை குத்த முயன்றதாக கூறப்படுகிறது .
இதை மாமியார் வாசுகியும் . கொழுந்தியாள் சுபஸ்ரீயும் தடுத்துள்ளனர். அப்போது மாமியார் வாசுகிக்கும், கொழுந்தியாள் சுபஸ்ரீக்கும் கத்திக்குத்து விழுந்தது .அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து இரணியனின் மாமியார் வாசுகி கொடுத்த புகாரின் பேரில் மருமகன் இரணியன், ஜனா கார்த்திக், நிரஞ்சன், கௌதம் உள்பட ஆறு பேர் மீது திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி வழக்குப்பதிவு செய்தார்.
பின்னர் இரணியன், ஜனா கார்த்திக், நிரஞ்சன், கௌதம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அடையாளம் தெரியாத 2 நபரை தேடி வருகின்றனர்.