திருச்சி பஸ் நிலையத்தில் பஸ்களில் அதிரடி சோதனை:
சமீப காலத்தில் திருச்சி மாநகரத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர்
ஹாரன்கள் பொருத்தப்படுவதாகவும்,
அதிக சத்தம் எழுப்பும் இந்த ஹாரன்கள் வாகன ஓட்டிகளை பீதிக்கு உள்ளாக்குவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து
திருச்சி
ஸ்ரீரங்கம்,
கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில்,
மோட்டார் வாகன ஆய்வாளர்கள்
செந்தில்குமார், பிரபாகரன், அருண்குமார் .
முகமது மீரான் செந்தில் ஆகியோர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
30க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பான்களை சுற்றுச்சூழல் அறிஞர் துணையுடன் ஒலி அளவை கண்டறியும் கருவியின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
சோதனை செய்யப்பட்ட 30 பேருந்துகளில் 14 பேருந்துகள் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்ப
ட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு தலா
1000 ம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுவாக காதை கிழிக்கும் வகையில்
அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பொருத்தக் கூடாது என பலமுறை அறிவுறுத்தப்
பட்டுள்ளது.
90 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பினால் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற வாகன சோதனையில் அதிக ஒலி எழுப்பிய 14 வாகனங்களுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் அதிக ஒலி எழுப்பும் வாகன ஒட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.