கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி நவநகர் பகுதி உள்ளது. இங்கு மகேஷ் (வயது 42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு விஜயலட்சுமி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர் தன்னுடைய கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு மகேஷ் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மகேஷின் வீடு பூட்டி இருந்த நிலையில் திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது மகேஷ் மற்றும் விஜயலட்சுமி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் அழகிய நிலையில் கிடந்தனர். இவர்களுடைய சடலங்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கள்ளக்காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.