திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்ட பேனர்கள் மற்றும் விதவிதமான போஸ்டர்களால் கலக்கியுள்ள எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார்.
நாளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமாரின் பிறந்தநாள் .
நடந்து முடிந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் கரூர் பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர்களுக் காக தினமும் பம்பரமாக சுழன்று கடும் வெயிலின் பார்க்காமல் மூன்று தொகுதி இருக்கும் சென்று தேர்தல் பணியாற்றியவர் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் .
தீவிரமாக கழக பணியாற்றியவரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காத்துக் கொண்டு உள்ளனர் .
இந்நிலையில் திருச்சி மாநகர் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாவட்ட செயலாளரை வாழ்த்தி விதவிதமான போஸ்டர்கள் அடித்து உள்ளனர் .
ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் திருச்சி மாநகர எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார் பொன்னியின் செல்வரே, திருச்சியின் அடையாளமே, தி ப்ரொபசர் , கழகப் போர்வாளே, தவமின்றி கிடைத்த வரமே, பண்பாளரே , மலைக்கோட்டை மன்னனே , போர் கண்ட சிங்கமே, அண்ணனை நம்பினோர் கைவிடப்படார் என பலவாறு போஸ்டர்களும் தெற்கு மாவட்ட அலுவலகம் முன் பிரமாண்ட பேனர்களும் வைத்து அசத்தியுள்ளார் .
சிந்தை முத்துக்குமார் வைத்துள்ள பேனர்களையும், போஸ்டர்களையும் பார்த்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.