பாராளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று நடைபெற்றது .
திருச்சியில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது .
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் திருச்சி எடத்தெரு யது குல சங்கம் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.