Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் மிகப் பிரமாண்ட வரவேற்பு .

0

 

வரும் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது .

இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு கட்டமாக திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து மாவட்ட செயலாளர்கள், அணி செயலாளர்கள் , கழக அமைப்பு செயலாளர்கள், நடிகர் நடிகைகள் என தொடர்ந்து தீவிர வாக்கு சேகரித்து வரும் நிலையில்

நேற்று இரவு 9 மணி அளவில் ஏர்போர்ட் டீக்கடை எதிரில் திருச்சி மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது . 200க்கும் மேற்பட்ட பெண்கள் பூரண கும்ப மரியாதை செய்து ஆராத்தி எடுத்து வரவேற்றனர் .

வேட்பாளரிடம் கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் திரண்ட பெண்கள் எங்கள் வார்டு மற்றும் எங்கள் பகுதியில் உள்ள அனைவரும் உங்களுக்கே வாக்களிப்போம் என உறுதி அளித்தனர் . இதனால் வேட்பாளர் கருப்பையா பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார் .

இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன், கழக அமைப்பு செயலாளர் ரத்தினவேல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

முன்னதாக வேட்பாளர் கருப்பையா ஏர்போர்ட் டீக்கடையில் அனைவருக்கும் டீ போட்டுக் கொடுத்து வாக்குகள் சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.