திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 13 ம் ஆண்டு விளையாட்டு விழா. கபடி வீரர் பிரபஞ்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.
கேர் பொறியியல் கல்லூரி 13 ம் ஆண்டு விளையாட்டு விழா.
கேர் பொறியியல் கல்லூரி 13 ம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
ஹரியானா ஸ்டீல் ரைடர்ஸ் மற்றும் புரோ கபடி லீக் இந்திய கபடி வீரர் பிரபஞ்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சிறப்பு விருந்தினர் கொடியேற்றி விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்தார்.
விளையாட்டு வீரர்களின் வண்ணமிகு அணிவகுப்பை கண்டு மகிழ்ந்தார். அதை தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் உறுதி மொழி வாசித்தனர்.
ஒலிம்பிக்ஜோதி ஏற்றி விளையாட்டு போட்டிகள் துவங்கின.
சிறப்பு விருந்தினர் பேசியதாவது: “பெற்றோர்கள் மாணவர்களை விளையாட்டு போட்டிகளில் பங்குபெற ஊக்குவிக்க வேண்டும்.
திறமையான மாணவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று இந்திய அணிக்கு பெருமை சேர்க்க வேண்டும். மேலும் மாணவர்கள் விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும்” என்றார்.
நிறைவாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிறைவாக கேர் இன்ஜினியரிங் காலேஜ் குழுமத்தின் முதல்வர் டாக்டர். சாந்தி நன்றியுரை ஆற்றினார்.
பா. பிரதிவ் சந்த், தலைமை நிர்வாக அதிகாரி -கேர் கல்வி குழுமம் கேர் பொறியியல் கல்லூரி அனைத்து டீன்கள் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினர்.
மேலும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உடன் இருந்தனர்.