Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட திருநங்கையை தாக்கிய வாலிபர் மீது வழக்கு .

0

'- Advertisement -

 

Ad banner
TVK ad

திருச்சி மேலப்புதூர் பூசாரி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாயா (வயது 40)
திருநங்கை.
இவருக்கும் மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் பாபு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்த போது மாயா அந்த வாலிபருக்கு ரூபாய் 50,000/- மற்றும் ஒன்றரை பவுன் நகை ஆகியவற்றை கொடுத்துள்ளார்.
பின்னர் சிறிது காலம் கழித்து நகை பணத்தை திரும்ப கேட்டார்.

ஆனால் சுரேந்தர் பாபு கொடுக்க மறுத்தார். இந்த நிலையில் மாயா அவரது வீட்டுக்குச் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மாயாவை கெட்ட வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாயா பாலக்கரை புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் போலீசார் சுரேந்தர் பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.