Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் கமலஹாசன் பிரச்சாரம். தெற்கு மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் ஒருங்கிணைப்பாளராக நியமனம்

0

'- Advertisement -

 

Ad banner

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துறை வைகோ மற்றும் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு ஆகியோரை ஆதரித்து மக்கள் நீதி மய்ய நிறுவனத் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் .

வரும் இரண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே இருந்து திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார் .

பின் பெரம்பலூர் மற்றும் துறையூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்த நிகழ்வுகளுக்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் .

இத்த நிகழ்வுகளில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்க கிஷோர் குமார் அழைப்பு விடுத்துள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.